நட்ஸ் தேங்காய் லட்டு

எப்படிச் செய்வது?

ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பேரீச்சை, பாதாம், முந்திரி, கன்டென்ஸ்டு மில்க், பொடித்த சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் நெய் சேர்த்து உருகியதும் தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கவும். தேங்காய்த்துருவல் நிறம் மாறும்போது கலந்த நட்ஸ் கலவையை கலக்கவும். சர்க்கரை உருகி பாகுப்பதம் வந்து கலவை கெட்டியானதும், ஏலக்காய்த்தூளைச் சேர்த்து கலந்து இறக்கவும். ஓரளவு சூடு ஆறியதும் கையில் நெய் தடவிக் கொண்டு வதக்கிய கலவையைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்.

குறிப்பு: கொப்பரை தேங்காயில் பர்பி செய்யலாம். இளந்தேங்காயில் பர்பி செய்தால் சுவை குறைவாக இருக்கும்.

Tags :
× RELATED காலிஃப்ளவர் மிளகு சீரகம் பொரியல்