சில்லி பாயின்ட்...

* புளோயம்போன்டீனில் நடக்கும் முதல் டெஸ்டில் (4 நாள் ஆட்டம்), தென் ஆப்ரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 509 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் பீட்டர் மலான் 163, டோனி 117, ஜேசன் ஸ்மித் 52, சைன்தெம்பா 82*, ஜார்ஜ் லிண்டே 51 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணி 2ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்துள்ளது. பிரித்வி 48 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் பாஞ்சால் 39, ஈஸ்வரன் 16 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

* வங்கதேச ஆல் ரவுண்டர் மகமதுல்லா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் 50 டெஸ்டில் விளையாடி 2914 ரன் (அதிகம் 150*, சராசரி 33.49, சதம் 5, அரை சதம் 16) மற்றும் 43 விக்கெட் (சிறப்பு 5/51) எடுத்துள்ளார்.

* இந்தோனேசியா ஓபன் சூப்பர் 1000 பேட்மின்டன் தொடரின் 2வது சுற்றில் விளையாட இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி காந்த், சாய் பிரனீத் தகுதி பெற்றுள்ளனர்.

* ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் மோதிய பிரான்ஸ் 5-4 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. சஞ்சய் ஹாட்ரிக் கோல் அடித்தும் இந்தியாவால் வெற்றி பெற முடியவில்லை.

Related Stories:

More