காலிபிளவர் குழம்பு

செய்முறை :

காலிபிளவரை வெந்நீரில் லேசாக வேக வைக்கவும். பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிநீரில் 10 நிமிடம் வேக வைக்கவும். நறுக்கிய கொத்தமல்லி, தக்காளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய பல்லாரி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். பல்லாரி வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

தொடர்ந்து காலிபிளவரையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக பிரட்டவும். இதில் தக்காளி, கொத்தமல்லி விழுதை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி வைக்கவும். குழம்பு திக்கானதும் இறக்கவும். கமகம மணத்தில் காலிபிளவர் குழம்பு ரெடி.

Tags :
× RELATED காலிஃப்ளவர் மிளகு சீரகம் பொரியல்