×

கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்..!

கான்பூர்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரை முழுமையாக இந்தியா கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக 2 டெஸ்ட் நடைபெற உள்ளது. இதில் முதல் டெஸ்ட் கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
கேப்டன் விராட் கோஹ்லி முதல் டெஸ்ட்டில் ஓய்வில் உள்ள நிலையில் ரகானே அணியை வழிநடத்த உள்ளார். ரோகித்சர்மா, பும்ரா, ஷமி, ரிஷப்பன்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் இடது தொடையில் தசைபிடிப்பு காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார்.

இதனால் சூர்யகுமார்யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னணி வீரர்கள் இல்லாததால் இளம்வீரர்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு உள்ளது. ரகானே பார்ம் இழந்து தவிக்கும் நிலையில், கோஹ்லி இல்லாததால் கேப்டனாக தனது இடத்தை தக்க வைத்துள்ளார். புஜாரா மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்திய அணி 3 ஸ்பின்னர், 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது.மறுபுறம் உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்து கேன் வில்லியம்சன் தலைமையில் வலுவாக உள்ளது. ரோஸ் டெய்லர், லதாம்,நிக்கோலஸ், மிட்செல், பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர்.

பந்துவீச்சில் சவுத்தி,ஜேமீசன், நீல் வாக்னர் , சுழலில் சாட்னர், அஜாஸ்பட்டேல்.அசத்தலாம். இந்திய நேரப்படி நாளை காலை 9 மணிக்கு போட்டி தொடங்கி நடக்கிறது. டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க இந்தியா போராடும். டாப் 2 அணிகள் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியா தொடரை கைப்பற்றினால் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறலாம்.அணி விபரம் இந்தியா: சுப்மன் கில்,மயங்க் அகர்வால், புஜாரா ஷ்ரேயாஸ் ஐயர்/ சூர்யகுமார் யாதவ், ரகானே(கே), விருத்திமான் சாஹா(வி.கீ) , ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்/ உமேஷ் யாதவ்.

நியூசிலாந்து: லதாம்,ப்ளன்டெல்/ நிகோலஸ், வில்லிம்சன்(கே), ரோஸ் டெய்லர், மிட்செல், பிலிப்ஸ்,ஜேமீசன், சவுத்தி, சாட்னர்,அஜஸ்பட்டேல், நீல்வாக்னர்.


Tags : India ,New Zealand ,Kanpur Greenpark Ground , Kanpur, India, New Zealand, First Test
× RELATED நியூசியுடன் முதல் டெஸ்ட்: இந்தியா...