பிரட் சமோசா

செய்முறை:

முதலில் பிரட்டை தூளாக பொடிக்கவும். மைதா மாவில் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு போல பிசையவும். கேரட்டை துருவவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் நறுக்கிய பல்லாரி முதலில் வதக்கி, பின்னர் பீன்ஸ், கேரட், இஞ்சித்துருவல், பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.
 
இத்துடன் பிரட் தூள், உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும். பிறகு பிசைந்த மைதா மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, உள்ளே உருண்டையை வைத்து, சமோசா வடிவில் மூடவேண்டும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், அடுப்பை மிதமாக வைத்து ஒவ்வொரு சமோசாவாக போட்டு பொரித்தெடுக்கவும். டேஸ்டான பிரட் சமோசா ரெடி.

Tags :
× RELATED காலிஃப்ளவர் மிளகு சீரகம் பொரியல்