பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை தயாரிக்கும் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனத்திற்கு எதிராக ஆப்பிள் நிறுவனம் வழக்கு

வாஷிங்டன்: பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை தயாரிக்கும் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனத்திற்கு எதிராக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகள்  ஒட்டுகேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து என்.எஸ்.ஓ. நிறுவனம் தனது செயலிகளை ஐ-போன்களில் நிறுவுவதற்கு தடை தேவை என ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் இழப்புகளுக்கு நஷ்டஈடாக 75,000 அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

Related Stories: