ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன் பிரீபெய்டு கட்டணங்கள் அதிகரிப்பு

மும்பை: பாரதி ஏர்டெல்லை தொடர்ந்து, வோடபோன்  ஐடியா நிறுவனமும் பிரீபெய்டு கட்டணங்களை அதிகரித்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனம், பிரீபெய்டு கட்டணங்களை உயர்த்தி நேற்று முன்தினம் அறிவித்தது. இது, வரும் 26ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதை தொடர்ந்து, வோடபோன் நிறுவனமும் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதன்படி 28 நாட்களுக்கான குறைந்த பட்ச பேக்கேஜ் கட்டணம் ரூ.79ல் இருந்து ரூ.99 ஆகவும், 28 நாட்களுக்கான அளவற்ற அழைப்பு, 2ஜிபி டேட்டா பேக்கேஜ் ரூ.149ல் இருந்து ரூ.179 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோல், 28 நாட்களுக்கான தினமும் ஒரு ஜிபி மற்றும் அழைப்புகள் பேக்கேஜ் ரூ.219ல் இருந்து ரூ.269 ஆகவும், அதிகபட்சம் தினமும் 2 ஜிபிக்கான 28 நாள் பேக்கேஜ் ரூ.299ல் இருந்து ரூ.359 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 56 நாட்களுக்கான குறைந்த பட்ச பேக்கேஜ் ரூ.399ல் இருந்து ரூ.479 ஆகவும், 84 நாட்களுக்கான குறைந்த பட்ச பேக்கேஜ் ரூ.379ல் இருந்து ரூ.459 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு பேக்கேஜ்களாக 365 நாட்களுக்கான அளவற்ற அழைப்பு மற்றும் 24ஜிபி டேட்டா பேக்கேஜ் ரூ.1,499ல் இருந்த ரூ.1,799 எனவும், அளவற்ற அழைப்பு மற்றும் தினமும் 1.5 ஜிபி டேட்டா பேக்கேஜ் ரூ.2,399ல் இருந்து ரூ.2,899 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல், டேட்டா டாப்-அப் பேக்கேஜ் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வுகள் நாளை அமலுக்கு வருவதாக, வோடபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: