அதிரடி வீழ்ச்சியில் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.632 குறைந்து ரூ.36,272க்கு விற்பனை : சாமானியர்களுக்கு ஜாக்பாட்!!

சென்னை : சமீப காலமாகவே தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். ஏதோ ஒரு நாள் குறைந்தாலும் அடுத்த நாளே மிகப் பெரிய அளவில் உயர்த்தப்படுகிறது. எனினும், வாரத்தின் 2ம் நாளான இன்று நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி. தங்கம் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம். சென்னையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4534 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 632 ரூபாய் குறைந்து 36,272 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.70.40 ஆகவும் ஒரு கிலோ வெள்ளி 70,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக குறைந்த பின்னர் வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை இருந்தால் வாங்கலாம்.

Related Stories:

More