காளான் புலாவ்

செய்முறை:

குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். இத்துடன் புதினா, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும். பின்பு நறுக்கிய பல்லாரி, பச்சை மிளகாய், காளானை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தயிர் சேர்த்து ஊற வைத்த அரிசியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். நன்கு கொதித்தவுடன் குக்கரை மூடி விசில் போட்டு 10 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து அணைக்கவும். பின்பு நன்கு கிளறி சிறிது நெய் சேர்த்து பரிமாறவும். கலக்கல் சுவையில் காளான் புலாவ் ரெடி.

Tags : Mushroom Pulau ,
× RELATED மாங்காய் மசாலா பப்பட்