தக்காளி டபுள் பீன்ஸ் ஃப்ரை

எப்படிச் செய்வது?

கழுவி சுத்தம் செய்த டபுள் பீன்ஸை உப்பு போட்டு தண்ணீரில் நன்கு வேகவைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகம், சோம்பு, பட்டை, கிராம்புத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, தக்காளியை போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், வெந்த டபுள் பீன்ஸை போட்டு பிரட்டி வறவறவென வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்பு: சோயா பீன்ஸ், காராமணி, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, ஸ்வீட்கார்ன், பட்டாணி சுண்டலிலும் ஃப்ரை அல்லது கிரேவியாகவும் செய்யலாம்.

Tags :
× RELATED விரால் மீன் மஞ்சூரியன்