யுடிஎஸ் ஆப் மூலம் ரயில் டிக்கெட்: ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் பயணிப்போர், ‘யுடிஎஸ் ஆப்’ மூலமாக இன்று முதல் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அனைத்து தரப்பு பயணிகளும் எவ்வித நேர கட்டுப்பாடும் இல்லாமல் நான்கு வழித்தடங்களிலும் பயணிக்க இன்று முதல் அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு இல்லாமல் ஒருமுறை பயணித்தல், இருமுறை பயணிப்பதற்கான பயணச்சீட்டு, சீசன் டிக்கெட் போன்றவற்றை இந்த நான்கு வழித்தடங்களிலும் அனைத்து வகை பயணிகளும் பெறலாம்.

மேலும் இந்த டிக்கெட்டுகளை ‘யுடிஎஸ் ஆப்’ மூலமாக அனைத்து வகை பயணிகளும் நேரக்கட்டுப்பாடு இல்லாமல் பெற முடியும். கொரோனா முழுமையாக சரியாகததால் குறிப்பிட்ட மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த ஆப் மூலமாக புறநகர் அல்லாத பகுதிகளுக்கு செல்வோர் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படவில்லை. எனவே அனைத்து ரயில்நிலையங்களிலும் உள்ள முன்பதிவு மையங்களுக்கு சென்று புறநகர் அல்லாத இடங்களுக்கு செல்வோர் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.

Related Stories: