வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு

செய்முறை

முதலில் அரைக்க கொடுத்த பொருட்களை வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து தேங்காய் துருவலுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து தனியாக வைக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து பின் பொடியாக நறுக்கிய பல்லாரியை சேர்த்து வதக்கவும். பல்லாரி வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளி மசாலாவாக மாறும் வரை வதக்கவும். இப்போது சிக்கனை சுத்தம் செய்து, கழுவி இத்துடன் சேர்த்து வதக்கவும். பின் அனைத்து பொடி வகைகள், உப்பு சேர்த்து 20 நிமிடம் மிதமான சூட்டில் மூடி போட்டு சமைக்கவும். தண்ணீர் விட தேவையில்லை. சிக்கன் நீர் விட்டு நன்கு வெந்திருக்கும். இப்போது அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி 10 நிமிடம் கழித்து இறக்கவும். சொக்க வைக்கும் சுவையில் வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு ரெடி. பிராய்லர் சிக்கனுக்கு பதிலாக நாட்டுக்கோழியையும் பயன்படுத்தலாம்.

Tags :
× RELATED வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு