உத்திரமேரூரில் ஊட்டச்சத்து உணவுகள் விழிப்புணர்வு முகாம்: கலெக்டர் பங்கேற்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட திட்ட அலுவலர் சற்குணா தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் பழனி, வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் ஊட்டச்சத்தான உணவுகள், ரத்த சோகை நோய்கள் வராமலிருக்க பெண்கள் எடுக்க வேண்டிய உணவு முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் சத்தான தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு கண்காட்சியினை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர். பின்னர் சிறந்த தாய்மார்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

More
>