திருமணம் செய்து வைக்க மறுப்பு துப்பாக்கியால் சுட்டு வாலிபர் தற்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தாதகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பன்னி ராஜா (எ) அழகர் (60). . இவரது 4 மகள்களுக்கும், மூத்த மகன் மணிகண்டனுக்கும்(22) திருமணமாகி விட்டது. இளைய மகன் பாலசுப்பிரமணி (19). டூவீலர் மெக்கானிக். இவர் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகிவிட்டதால் தனக்கும் திருமணம் செய்து வைக்கும்படி தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவும் தந்தை அழகருக்கும், பாலசுப்பிரமணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அழகர் வெளியில் சென்று விட்டார்.

பின்னர் பாலசுப்பிரமணி நாட்டு துப்பாக்கியை எடுத்து கொண்டு வெளியில் ஓடினார். வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள புளியந்தோப்புக்கு சென்றதும் பாலசுப்பிரமணி தனது தாடையில் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார். அவரது உடலை மணிகண்டன் மற்றும் உறவினர்கள் தூக்கி வந்தனர். மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தியபோது, நாட்டு துப்பாக்கியால் சுட்டு பாலசுப்பிரமணி தற்கொலை செய்தது தெரியவந்தது. முட்புதரில் இரு துண்டாக கிடந்த நாட்டு துப்பாக்கியையும் கைப்பற்றினர்.

Related Stories:

More
>