பெட்ரோல், டீசல் விலை 23வது நாளாக அதிகரிப்பு

சேலம்: இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இம்மாதத்தில் 23வது நாளாக நேற்றும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த 23 நாட்களில் பெட்ரோல் ரூ.5.45, டீசல் ரூ.6.45 என்று அதிகரித்தது.  

இதனால், சென்னையில் நேற்று முன்தினம் ரூ.104.83க்கு விற்கப்பட்ட பெட்ரோல் நேற்று 30 காசுகள் அதிகரித்து ரூ.105.13க்கும், டீசல் 34 காசுகள் உயர்ந்து ரூ.101.25க்கும் விற்பனையானது. தமிழகத்தின் பிற பகுதிகளில் கடந்த வாரமே பெட்ரோல் விலை ரூ.105ஐ தாண்டிய நிலையில் நேற்று சென்னையிலும் 105ஐ தாண்டி உள்ளது. சேலத்தில் நேற்று பெட்ரோல் 30 காசு அதிகரித்து ரூ.105.45க்கும், டீசல் 34 காசு அதிகரித்து ரூ.101.60க்கும் விற்பனையானது.

Related Stories:

More
>