பெங்களூருவில் சுற்றுலா, கலாசாரத்துறை அமைச்சர்கள் மாநாடு தமிழக சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

பெங்களூரு: சுற்றுலா மூலம் பண்பாடு, கலாச்சாரத்தை போற்றும் மாநிலமாக தமிழகம் இருப்பதாக தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். ஒன்றிய அரசின் சுற்றுலா மற்றும் கலாசாரா துறை சார்பில் தென்மாநில சுற்றுலா மற்றும் கலாசாரதுறை அமைச்சர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர ஒட்டலில் நேற்று தொடங்கியது. இதை ஒன்றிய சுற்றுலா துறை இணையமைச்சர் ஜி.கிஷன்ரெட்டி தொடங்கி  வைத்தார். ஒன்றிய இணையமைச்சர்கள் எல்.முருகன், பகவந்த கூபே, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், புதுச்சேரி  சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் உட்பட பல்வேறு மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இதில், தமிழக அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், ‘கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுற்றுலா துறை வெகுவாக பாதிக்கப்பட்டது. பலர் வாழ்வாதாரம் இழந்தனர். தற்போது,  தொற்று குறைந்துள்ளதால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம். தென்மாநிலங்களில் தமிழகத்தில் சிறப்பான சுற்றுலா தலங்கள் உள்ளது. கடந்தாண்டு 14 லட்சம் இந்தியர்கள், 12 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்,’’  என்றார்.

Related Stories: