கேல் ரத்னா விருதுக்கு 11 பெயர்கள் பரிந்துரை

புதுடெல்லி: விளையாட்டுத் துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கேல் ரத்னா விருதுக்கு இந்த ஆண்டு இது வரை இல்லாத அளவுக்கு 11 வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கேல் ரத்னா விருதுக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுடன் அர்ஜுனா, துரோணாச்சாரியா விருதுகளுக்கும் சேர்த்து மொத்தம் 74 வீரர், வீராங்கனைகள் கவுரவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பரிந்துரை பட்டியலில் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு மட்டுமே 11 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் குமார், இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செட்ரி, மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அர்ஜுனா விருதுக்கு 35 பேர் உள்பட இந்த ஆண்டு மொத்தம் 72 பேர்  பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

* கேல் ரத்னா:

நீரஜ் சோப்ரா (தடகளம்)

ரவி தாஹியா (மல்யுத்தம்)

பி.ஆர்.ஜேஷ் (ஹாக்கி)

லவ்லினா போர்கோஹெய்ன் (பாக்சிங்)

சுனில் செட்ரி (கால்பந்து)

மிதாலி ராஜ் (கிரிக்கெட்)

பிரமோத் பகத் (பாரா பேட்மின்டன்)

சுமித் அன்டில் (பாரா ஈட்டி எறிதல்)

அவனி லெகரா (பாரா துப்பாக்கிசுடுதல்)

கிருஷ்ணா நாகர் (பாரா பேட்மின்டன்)

மணிஷ் நர்வால் (பாரா துப்பாக்கிசுடுதல்)

Related Stories: