30 லட்சம் தொண்டர்களுக்கு பாஜ வழங்கிய தீபாவளி பரிசு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தனது கட்சி தொண்டர்களை பலப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் பாஜ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 1.63 லட்சம் வாக்குச்சாவடிகள் (பூத்) உள்ளன. ஒரு பூத்துக்கு 20 உறுப்பினர்களை கொண்ட கமிட்டியை பாஜ அமைத்துள்ளது. இந்நிலையில், பூத் அளவிலான 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பாஜ தொண்டர்களுக்கு தீபாவளி பரிசை வழங்கி, மாநில பாஜ உற்சாகப்படுத்தி உள்ளது. இந்த பரிசு பெட்டகத்தில் தோரணங்கள், தாமரை வடிவ அகல் விளக்குகள் உள்ளன. இது தொடர்பாக மாநில பாஜ துணை தலைவர் விஜய் பகதூர் பதக் கூறுகையில், ‘‘பாஜ.வில் பூத் தொண்டர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களுக்கு பரிசுகள் வழங்குவது வழக்கம். தாமரை வடிவ விளக்கை ஏற்றும்போது இருள் அகல்வதோடு, பிரதமர் மோடி, முதல்வர் ஆதித்யநாத் தொடங்கி ைவத்த வளர்ச்சி திட்டங்களும் வலுப்பெறும்,” என்றார்.

Related Stories:

More
>