கொண்டாட்டம் என்ற பெயரில் மக்களின் உயிர், உரிமைகளுடன் விளையாடுவதை ஏற்க முடியாது: பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டிப்பு

புதுடெல்லி: ‘கொண்டாட்டம் என்ற பெயரில் மக்களின் உயிருடனும், உரிமையுடனும் பட்டாசு தயாரிப்பாளர்கள் விளையாடுவதை அனுமதிக்க முடியாது,’ என்று உற்பத்தியாளர்கள் கண்டித்துள்ளது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை மாற்றி, காலையில் 4 மணி நேரமும், மாலையில் 4 மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம், தடை செய்யப்பட்ட  பேரியம், நைட்ரேட் ரசாயனங்கள் அடங்கிய பட்டாசுகளை பயன்படுத்தக் கூடாது. பட்டாசு தயாரிக்க உச்ச நீதிமன்றம் விதித்த விதிமுறைகளை பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு இருப்பதாக கண்டனமும் தெரிவித்தது.

இந்நிலையில், நீதிபதி எம்.ஆர்.ஷா அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்டாசு  உற்பத்தியாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘பட்டாசு  உற்பத்தியில் எந்த விதிமுறை மீறலிலும் ஈடுபடவில்லை. பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்கிறோம். எனவே, அதனை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். முழுமையாக தடை விதிக்கக் கூடாது,’ என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பண்டிகை, திருவிழா, நிகழ்ச்சியில் உற்சாகத்துக்காகவும், தனி நபரின் மகிழ்ச்சிக்காகவும் விதிமுறைகளை மீறி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் வெடிக்கப்படுகிறது.

இதில்  பிறரின் உடல் நலம் பாதிப்பைதையும், உயிர் பறிக்கப்படுவதையும்  பட்டாசு தயாரிப்பாளர்கள் கருத்தில் கொள்வது கிடையாது. இத்தகைய செயல்பாட்டை எப்படி அனுமதிக்க முடியும்? ஒருவரின் நல்வாழ்வு என்பது அவரின் அடிப்படை உரிமை. அதனால், மகிழ்ச்சிக்காகவும், உற்சாகத்துக்காகவும் பட்டாசுகளை வெடித்து சுற்றுச்சூழலை பாதிக்க செய்யக் கூடாது,’ என தெரிவித்தனர். பட்டாசு உற்பத்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அர்ஜுன் கோபால், “நீதிமன்றம் கடந்தமுறை இருதரப்புக்கும் பாதகம் வராத வகையில் தற்காலிகமாக பல்வேறு நிபந்தனைகள், வழிகாட்டு நெறிமுறைகளுடன் பசுமை பட்டாசை அனுமதித்தது.

ஆனால், மகாராஷ்ரா, மேற்கு வங்கத்தில் ஆய்வின்போது பசுமை பட்டாசு என்ற போர்வையில் அதில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. எனவே, உற்பத்தியாளர்கள் விதி மீறலில் ஈடுபடவில்லை எனக்கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. விதிமீறல் அதிகமாக இருந்ததால்தான் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கே உத்தரவிடப்பட்டது,’ என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

* தயாரித்தால் தானே வெடிக்க தோணும்

‘பட்டாசுகளை தயாரித்தால் தானே அதை வெடிக்க வேண்டும் என்ற ஆர்வமும், முயற்சியும் நடக்கும். தயாரிப்பு இல்லை என்றால் அதற்கான எண்ணம் தோன்றாதே... பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவது குறிப்பிட்ட சமூகத்துக்கோ, குழுக்களுக்கோ எதிரானது அல்ல,’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: