பால் பாக்கெட்டுகளில் ஆவின் இனிப்பு வகைகள்

ஆவின் நிறுவனம் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்காக காஜுகத்லி, காஜு பிஸ்தா ரோல், தட்டி மில்க் கேக், மோத்தி பாக், காபி பிளேவர்டு மில்க் பர்பி உள்ளிட்ட புதிய வகை இனிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. ஆவின் இனிப்புகள் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடையும் வகையில் புதிய முயற்சியாக ஊதா, பச்சை, ஆரஞ்சு அரை லிட்டர், ஒரு லிட்டர் பால் பாக்கெட்டுகளிலேயே இனிப்புகள் குறித்த விளம்பரம் அச்சிடப்பட்டுள்ளது. இது, பொதுமக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: