சொத்து, கடன் விவரங்களை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறையின் சார்பில், அனைத்து அரசு செயலாளர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகள், மாவட்ட ஆட்சியர்கள், நீதிபதிகள், தலைமை நீதித்துறை நடுவர்கள் உள்ளிட்ட அனைத்து  துறைத் தலைவர்களுக்கும் கடந்த ஜூலை மாதம் ஒரு அரசாணை அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அரசுப் பணியாளர்கள் தமது சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையை உரிய காலத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவர்கள் அதை சமர்ப்பித்துள்ளதை அந்தந்த துறைச் செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேற்கண்ட அரசாணை பள்ளிக் கல்வி ஆணையர் அலுவலகத்தில் இருந்து தற்போது அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, சொத்து விவர அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான செயல்முறை அறிக்கையை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அனுப்பியுள்ளார்.

Related Stories: