போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அக்டோபர் 3ல் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க கோரி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை, அவர் பயன்படுத்தவும் இல்லை என வாதிடப்பட்டது. ஆர்யன் கான் சார்பில் ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். நாளை அல்லது நாளை மறுநாள் ஆர்யன் கான் சிறையில் இருந்து வெளிவருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்கானுக்கு ஜாமின் வழங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அக்டோபர் 3ல் ஆர்யன்கான் உள்ளிட்டோர் கைதாகினர். ஆர்யன்கான் ஜாமின் நிபந்தனைகள் குறித்து மும்பை உயர்நீதிமன்றம் நாளை அறிவிக்க உள்ளது.

மும்பையில் சொகுசுக் கப்பலில் போதைப் பார்ட்டியில் ஈடுபட்டதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதில் ஆர்யன் கானுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமின் மறுத்துவிட்டது. பலமுறை முயற்சித்தும் ஜாமின் கிடைக்காததால் அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆர்யன் கான் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜாரானார். அப்போது அவர் ஆர்யன் கான் போதை மருந்து உட்கொண்டதாக மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தவில்லை என்று வாதாடினார். ஆர்யன் கான் வாட்ஸ் அப் உரையாடல்களை ஆராய்ந்து போது. அது மிகப் பழைய உரையாடல் என்பதும், அதற்கும் அக்டோபர் 3ஆம் தேதி கார்டீலியா கப்பலில் நடந்ததற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிகிறது.

மேலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆர்யன் கான், அந்தக் கப்பலில் செல்ல டிக்கெட் வாங்கவில்லை. அவரை விருந்தினராக அழைத்துள்ளனர். ஆர்யன் கான் போதை மருந்து வாங்கியோ அல்லது உட்கொண்டோ இருந்து அவர் போதை மறுவாழ்வு சிகிச்சைக்கு தயாராக இருந்திருந்தால் இங்கு வழக்கு விசாரணைக்கே இடமிருந்திருக்காது.

ஆனால், ஆர்யன் கான் போதை மருந்து வாங்கவும் இல்லை. அவர், உட்கொள்ளவும் இல்லை. அதனால் அவர் தவறுதலாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று வாதிடப்பட்டது. ஆர்யன்கானுக்கு ஜாமின் வழங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

More
>