ரஷியாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கும் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கக் கூடாது : அமெரிக்க எம்பிக்கள் வலியுறுத்தல்!!

வாஷிங்டன் :  ரஷியாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை கொள்முதல் செய்யும் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கக் கூடாது என்று அமெரிக்காவின் முக்கிய எம்பிக்கள் சிலர் குரல் எழுப்பி உள்ளனர்.இது தொடர்பாக அதிபர் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் ரஷியாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வாங்க கடந்த 2018ம் ஆண்டே இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டதை சுட்டிக் காட்டியுள்ளனர். இதற்கான தொகையை 2025ம் ஆண்டு தான் ரஷியாவிற்கு இந்தியா கொடுத்து முடிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டு குழப்பத்தை விளைவித்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. எனவே ரஷியா மீதும் அந்நாட்டுடன் ஒப்பந்தங்கள் செய்யும் நாடுகள் மீதும் 2017ம் ஆண்டு இயற்றப்பட்ட அமெரிக்க எதிரிகள் மீதான பொருளாதார சட்டம் மூலம் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆயுதங்கள் வாங்கும் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்பதால் அது கூடாது என்று அமெரிக்க எம்பிக்கள் சிலர் அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளித்தால் அது அமெரிக்க தேசிய நலனுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் அந்நாட்டு எம்பிக்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு 3.4 பில்லியன் டாலர் அளவிற்கு ஆயுதங்கள் வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதையும் எம்பிக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

Related Stories: