×

மாடுகளை சாலையில் திரிய விடும் உரிமையாளர்களுக்கு அபராதம்: மன்னார்குடி நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

மன்னார்குடி: போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகளை திரிய விடும் உரிமை யாளர்களுக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச் சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, மன்னார்குடி நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளதாவது : நகராட்சிக்குட்பட்ட சாலைகள், பேருந்து நிலையம் மற்றும் தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் நாளுக்கு நாள் விபத்துஅதிகரிக்கிறது.

இதன் காரணமாக, மாடுகளை வளர்ப்போர் அவரவர் இடங்களில் மாடுகளை அடைத்து வைத்து பராமரிக்க வேண்டும். மீறினால் போக்குவரத்துக்கு இடை யூறாக சாலையில் மாடுகளை திரிய விடும் உரிமையாளர் களுக்கு மாடு ஒன்றுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மாடுகள் மீண்டும் பிடிபட் டால் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.Tags : Mannarukudi Municipal Commissioner , The cows will flirt on the road Owners fined: Mannargudi Municipal Commissioner warns
× RELATED தமிழகம் முழுவதும் நடந்த மறு ஆய்வில்...