நல்லாற்று ஓடையில் சாயக்கழிவு நீர் கலப்பு

திருப்பூர்:  திருப்பூர் நல்லாற்றில் மழை நீருடன், சாயக்கழிவு நீர் கலந்தோடியது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. இதில் கணிசமான அளவிற்கு சாய, சலலை ஆலைகள் மற்றும் பிரின்டிங் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் துணிகளுக்கு சாயமேற்றி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முறைகேடாக திருப்பூரில் செயல்பட்டு வருகிற சாய, சலவை ஆலைகள் அடிக்கடி நீர்நிலைகளில் சாயக்கழிவுநீரை திறந்துவிட்டு விடுகின்றன. இதனால் நீர்நிலைகள் மாசுபட்டு வருகின்றன.

 இந்நிலையில், திருப்பூர் மாநகர், புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி முறைகேடாக இயங்கும் சாய ஆலைகள் நொய்யல் ஆறு, நல்லாறு, ஜம்மனை ஓடை, சங்கிலிபள்ளம் ஓடை உள்ளிட்ட நீர் நிலைகளில் அவ்வப்போது சாயக்கழிவு நீரை கலந்து விடுகின்றன. இந்நிலையில், பிச்சம்பாளையம் பகுதியில் உள்ள நல்லாத்து ஓடையில், நேற்று காலை வெள்ளை நுரையுடன் சாயக்கழிவு நீர் ஓடியது. இது சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: