சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ் பேசியதில் என்ன தவறு? : செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி!

சென்னை : அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று ஓ பன்னீர் செல்வம் கூறியதற்கு அதிமுகவில் ஆதரவு பெருகி வருகிறது. மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், சசிகலா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கருத்து சொன்ன பிறகு, இணை ஒருங்கிணைப்பாளர் எந்த கருத்தையும் சொல்லவில்லை. அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தை தான் ஓ பன்னீர் செல்வம் சொன்னார். அதில் என்ன தவறு இருக்கிறத என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக சரிவை நோக்கி சென்று கொண்டு இருப்பதால் ஓ பன்னீர் செல்வம் சரியான முடிவை எடுக்க வேண்டும். கட்சியை பொறுத்தவரை ஓ பன்னீர் செல்வத்திற்கே அதிகாரம் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை கட்சியை விட்டு நீக்கிவிட்டு சசிகலா அல்லது ஓ பன்னீர் செல்வம் அதிமுகவின் ஒற்றை தலைமையாக வேண்டும் என வலியுறுத்தினார்.

மாவட்ட அளவிலான அதிமுக நிர்வாகிகள் பலரும் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.சசிகலாவை அதிமுக இணைப்பது குறித்த ஓபிஎஸ் கருத்துக்கு அதிமுக நிர்வாகிகள் இடையே ஆதரவு பெருகி வருவது எடப்பாடி தரப்பை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Related Stories: