வாணியம்பாடி அருகே காலாவதியான குளிர்பானங்களை சாலை ஓரத்தில் கொட்டிய மர்ம நபர்கள் : அசம்பாவிதம் ஏற்படும் முன் அப்புறப்படுத்த கோரிக்கை

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே காலாவதியான குளிர்பானங்களை சாலை ஓரத்தில் கொட்டியுள்ளனர். மேலும் இதனை அவ்வழியாக செல்லும் சிறுவர், சிறுமியர் எடுத்து அருந்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டை பெருமாள் கோயில் பின்புறத்தில் பாலாற்றின் கிளை ஆறு செல்கிறது. இதன் அருகில் சாலையோரங்களில் காலாவதியான குளிர்பானங்களை மர்ம நபர்கள் கொட்டியுள்ளனர்.

இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய சிறுவர், சிறுமிகள், பள்ளி மாணவர்கள்  குளிர்பானங்களை எடுத்து அருந்துகின்றனர். எனவே  அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீர்நிலைகளில் நகராட்சி நிர்வாகத்தால் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசி நோய்த் தொற்று பரவும் நிலை உருவாகியுள்ளது.மேலும் சாலை ஓரங்களில் மருத்துவ கழிவுகள் மற்றும் காலாவதியான குளிர்பானங்களை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>