×

ஏலகிரி மலையில் டேங்கர் லாரியில் கொண்டுச்சென்று கழிவுநீரை வனப்பகுதிக்குள் கொட்டிய டிரைவருக்கு 40 ஆயிரம் அபராதம்: சமூக வலைதளங்களில் பரவியதால் வனத்துறை அதிகாரி நடவடிக்கை

ஜோலார்பேட்டை: ஏலகிரி மலையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கழிவுநீரை டேங்கர் லாரி மூலம் நிரப்பி காட்டுப்பகுதிக்குள் கொட்டிய லாரி டிரைவருக்கு வனத்துறையினர் 40 ஆயிரம் அபராதம் விதித்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்ச்சியான ஒரே மாதிரியான பிரச்னை நிலவி வருவதால் ஏழைகளின் ஊட்டி ஏலகிரி மலை என்று அழைக்கப்படுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நாளுக்கு நாள் வந்த வண்ணம் உள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக அவர்கள் ஏலகிரி மலையிலேயே தங்கி பல்வேறு இடங்களை கண்டு ரசிக்க அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் ரிசார்ட்டுகள் போன்றவைகள் உள்ளன. இந்நிலையில் தனியார் தங்கும் விடுதிகள் ரிசார்ட்டுகள் மூலமாகவும் குடியிருப்புகளின் மூலமாகவும் கழிவுநீரை வெளியேற்ற தனியார் டேங்கர் லாரிகள் மூலம் நிரப்பப்பட்டு அதனை ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது காட்டுப்பகுதிக்குள் மர்ம நபர்கள் கொட்டி விடுகின்றனர். இதனால் கழிவுநீர் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஏலகிரி மலையில் தனியார் கழிவுநீர் அகற்றும் டேங்கர் லாரி மூலம் ஏலகிரி மலையில் இருந்து பல்வேறு இடங்களில் கழிவுநீர் நிரப்பப்பட்டு அதனை ஏலகிரி கோடை விழா அரங்கம் அருகே உள்ள வனப்பகுதிக்குள் லாரி டிரைவர் ஒருவர் வெளியேறியுள்ளார். இதனை யாரோ ஒருவர் படமெடுத்து வாட்ஸ்ப் உள்ளிட்ட  சமூகவலைதளத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். பின்னர் இதை அறிந்த  வனவர் பரந்தாமன் தலைமையிலான வனத்துறையினர் அந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் அந்த நபரை திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் நாகாசதீஷ் கடியாலாவிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கும்பகோணத்தை சேர்ந்த குமார் என்பதும், இவர் ஏலகிரி மலையிலேயே தங்கி ஆங்காங்கே கழிவுநீரை டேங்கர் லாரி மூலம் நிரப்பி வனப்பகுதிக்குள் ஓட்டி வந்ததும் தெரியவந்தது.  இதனை அடுத்து வன அலுவலர் அவருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் இதுபோன்று ஏலகிரி மலையில் கழிவு நீரை கொண்டு வந்து வனப்பகுதிக்குள் கொட்டாமல் இருக்க எழுதி வாங்கிக்கொண்டு டேங்கர் லாரியை விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏலகிரி மலையில் பல்வேறு பகுதிகளில் இதே போன்று டேங்கர் லாரி மூலம் கழிவுநீரை நிரப்பி வரும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

Tags : Yelagiri Hill , Taken by tanker truck to Yelagiri hill Driver fined Rs 40,000 for dumping sewage into forest
× RELATED சுற்றுலாதலமான ஏலகிரி மலையின்...