×

திருப்பத்தூர் பகுதியில் விதிமீறல் நகருக்குள் படையெடுக்கும் கனரக வாகனங்கள்

* போக்குவரத்து பாதித்து விபத்து அபாயம் * கலெக்டரின் நடவடிக்கைக்கு கோரிக்கை

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் நகர பகுதிகளில் விதிமீறி நுழையும் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது. இதை தடுக்க கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மைய பகுதியாக உள்ளது. திருப்பத்தூர் பகுதியில் இருந்து சென்னை, வேலூர், சேலம், கோயமுத்தூர், பெங்களூர், கேரளா, ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மாநில பகுதிகளுக்கு  சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் கனரக வாகனங்கள் திருப்பத்தூர் வழியாக செல்கின்றது.இந்நிலையில் திருப்பத்தூர் பகுதியில் ஆசிரியர் நகர் முதல் புதுப்பேட்டை ரோடு வரை குறுகிய சாலை பகுதியாகும். இந்த சாலை பகுதிகளில் செல்லும் கனரக வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசலும் மற்றும் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு வந்தது.

இதனைத் தடுக்க மாவட்டமாக அறிவிக்கப்பட்ட உடன் அப்போதைய மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கனரக வாகனங்களை ஊருக்குள் அனுமதிக்கக்கூடாது என்று இதனை தடுக்க கடந்த எஸ்பி விஜயகுமாருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வாணியம்பாடி, செட்டியப்பனூர் பகுதியில் போலீஸ் செக்போஸ்ட் அமைத்து தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தி  உள்ளே அனுமதிக்காமல் நிறுத்தினர். மேலும் இரவு 8 மணிக்கு மேல் கனரக வாகனங்களை திருப்பத்தூர் நகர பகுதியில் அனுமதித்தனர். தற்போது பகல் இரவு நேரங்களிலும் குறுகிய சாலையில் நாள்தோறும் 100க்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மாவட்ட எல்லை பகுதி மற்றும் வாணியம்பாடி பகுதியில் கனரக வாகனங்கள் ஊருக்குள் நுழைய கூடாது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வர வேண்டும் என்று கலெக்டர் உத்தரவின் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த விதியை மீறி கனரக வாகன ஓட்டிகள் நகருக்குள் வாகனங்களை கொண்டு வந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி பொதுமக்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையூறு செய்து வருகின்றனர். இதனால் திருப்பத்தூர் நகர பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிகமாக கனரக லாரியின் பின்பக்க டயரில் விபத்தில் சிக்கி உயிர் இழந்து வருகின்றனர்.எனவே உடனடியாக கலெக்டர் போலீசாருடன் கூட்டம் நடத்தி நகருக்குள் வரும் கனரக வாகனங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சுங்கக்கட்டணம் செலுத்தாத வாகன ஓட்டிகள்
சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அருகே சுங்கச்சாவடி மையம் உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் கட்டணத்தை கட்ட கூடாது என்பதற்காக சேலம், கோயமுத்தூர், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சரக்கு லாரிகள், கனரக வாகனங்கள் திருப்பத்தூர் நகருக்குள் நுழைந்து சென்று வருகிறது. சுங்கச்சாவடியில் பணம் கட்டுவததை தவிர்ப்பதற்காக நகருக்குள் வரும் கனரக வாகனத்தை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Tags : Tirupati , Violation in Tirupati area Heavy vehicles invading the city
× RELATED திருப்பதியில் ஆட்தேர்வு நடக்கவில்லை...