×

அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில் நகைகளை உருக்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அறங்காவலர்கள் நியமனத்துக்கு பிறகே கோயில் நகைகள் உருக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் உத்தரவாதம் அளித்துள்ளது. அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில் நகைகளை உருக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் நகைகளை உருக்க தடை விதிக்க கோரிய வழக்கில் அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இண்டிக்ட் கலெக்டிவ் அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு டிசம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசின் முடிவு படி 2000 கிலோவுக்கும் மேற்பட்ட நகைகள் உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்யும் திட்டத்தில் களமிறங்கியுள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து இண்டிக்ட் கலெக்டிவ் என்ற அமைப்பு 11 ஆண்டுகளாக தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்படவில்லை. இந்நிலையில் திடீரென மதிப்பீடு செய்யப்பட்டு தங்கக்கட்டிகளாக உருக்கப்படும் என்றும் அது வங்கிகளில் முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருப்பது அறநிலையத்துறை சட்டத்திற்கு விரோதமாக இருப்பதாகவும், அறங்காவலர்கள் பல இடங்களில் காலியாக இருக்கும் போது அந்த பணியிடங்களை நிரப்பாமல் நகைகளை மதிப்பீடு செய்வதோ அல்லது உருக்கி தங்க கட்டிகளாக மாற்றுவதோ சட்டவிரோதமானது என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி கோயில் நகைகளை உருக்கவில்லை என்றும் காணிக்கையாக வந்த நகைகளை மட்டும் தான் உருக்க போவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதேசமயம் இந்த காணிக்கையாக வந்த நகைகளை உருக்கும் பணியை மேற்பார்வையிடுவதற்காக உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் அடங்கிய குழுவினர் கணக்கெடுக்கும் பணிக்கு நியமித்து இருப்பதாகவும் அவர்கள் கணக்கெடுத்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 11 ஆண்டுகளாக நகைகள் கணக்கிடப்படவில்லை என்றும் வங்கிகளில் முதலீடு செய்வதன் மூலம் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவிற்கு வட்டி வருவாய் கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அது கோயிலின் செலவுகளுக்கு பயனுள்ளதாக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அறங்காவலர்கள் நியமனங்களை முடிக்கும் வரை தங்க கட்டிகளாக உருக்க கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

Tags : Chennai High Court , High Court, Temple Jewelry
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...