அடுத்த 2 மணி நேரத்திற்குள் சென்னை, காஞ்சிபுரம் உட்பட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைபெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: அடுத்த 2 மணி நேரத்திற்குள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைபெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழைபெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. இதை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த முறை இயல்பான அளவில் பருவ மழை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னைக்கு கன மழை வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. புறநகர்களில் லேசான சாரல் மழையாக இருந்தாலும், நகர்ப்புறங்களில் சற்று அடர்த்தியான மழைச்சாரலாக இது இருக்கிறது.

விட்டு விட்டுப் பெய்து வரும் இந்த சாரலால் நகரமே குளிர்ச்சியாகியுள்ளது. காலை முதலே வானம் இருட்டிக் கொண்டு காணப்பட்டது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுச்சேரி , காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: