சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு கல்லூரிகளில் ரூ.102 கோடியில் கட்டிடங்கள் திறப்பு

சென்னை: உயர்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். உயர்கல்வித்துறையின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.102 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து திறந்து வைத்துள்ளார். உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கக்கூடிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. திருச்சி, சிவகாசி, விருத்தாச்சலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு கலை கல்லூரிகளில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

வியாசர்பாடி, பெரும்பாக்கம், சிவகாசி, வேப்பந்தட்டை, விருத்தாச்சலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்கள், பல்நோக்கு கூடம், கழிவறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதி என்பது ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் இந்த பணிகள் முடிவடைந்து அதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அரசு துறை செயலாளர்கள் பங்கேற்று இருந்தனர். 102 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆய்வகங்கள், பல்நோக்கு கூடம், கல்லூரிகளின் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: