கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் கொடுத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்த அதிமுக நிர்வாகிகள் மீது கிரிமினல் நடவடிக்கை!: அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி..!!

மதுரை: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் கொடுத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்த அதிமுக நிர்வாகிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள கூட்டுறவு நகர வங்கியில் உள்ள பெட்டகத்தை ஆய்வு செய்த போது இரண்டரை கோடி ரூபாய் அளவிற்கு போலி நகைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

இதேபோன்று பல வங்கிகளில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் கொடுத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்த அதிமுக நிர்வாகிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதிபட கூறினார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் போலி நகைகளை வைத்து கடன் மோசடி செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.

இதனை தொடர்ந்து கூட்டுறவு சங்க பதிவாளருக்கு அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர். அதில் போலி நகைகள் மற்றும் தரம் குறைவான நகைகளை வைத்து 77 பேருக்கு 2 கோடியே 39 லட்சம் ரூபாய் அளவில் போலி நகைக்கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 பேருக்கு நகை எடையை கூடுதலாக கணக்கிட்டு 12 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

Related Stories:

More
>