கள்ளக்குறிச்சியில் சட்ட விரோதமாக ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது: ரூ.20 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சட்ட விரோதமாக ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். சூதாட்ட கும்பல் பயன்படுத்தி வந்த 400 சிம் கார்டுகள், 30திற்கும் மேற்பட்ட செல்போன்கள், சொகுசு கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி கிருஷ்ணநகர் பகுதியில் ஆன்லைன் மூலமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆன்லைன் சூதாட்டம் நடைபெற்ற வீட்டை சுற்றிவளைத்த தனிப்படை போலீசார் உள்ளே சென்று பார்த்த போது கம்ப்யூட்டர் வைத்து கொண்டு சிலர் ஆன்லைனில் பந்தயம் விளையாடி கொண்டிருந்ததை கண்டுபிடித்து அங்கிருந்த 9 பேரை கைது செய்தனர்.

இவர்கள் ஆன்லைன் மூலமாக பலரிடம் பல கோடி கணக்கில் பணத்தை மோசடி செய்து வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கடந்த மாதம் சூதாட்டத்தால் எவ்வாறு குடும்பங்கள் அழிக்கின்றன என்று கூறும் குறும்படம் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருந்து ஆன்லைன் சூதாட்ட வலையில் சிக்காமல் தப்பிக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் நடத்தி வாங்கிய சொத்துக்களும் முடக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>