×

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.105ஐ தாண்டியது.. டீசல் விலையும் ரூ.101ஐ கடந்து விற்பனை : நடுத்தர மக்கள் கவலை!!

சேலம்: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றனர். இதனால், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் ரூ106க்கு அதிகமாகவும், டீசல் ரூ100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது.

இந்த நிலையில் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசும், டீசல் 33 காசும் அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் பெட்ரோல் ரூ105.13க்கும், டீசல் ரூ.101.25க்கும் விற்பனையாகிறது. பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக சவூதி அரேபியா, வளைகுடா நாடுகள் மற்றும் ரஷியாவுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப சிங் பூரி கூறியுள்ளார்.


Tags : Chennai , பெட்ரோல், டீசல்
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...