தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினி சென்னை திரும்பினார்

சென்னை: தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். டெல்லியில் நடந்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவிடம் இருந்து அந்த விருதை அவர் பெற்றுக்கொண்டார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா மற்றும் பேரக் குழந்தைகளுடன் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11.50 மணிக்கு ஏர்இந்தியா விமானத்தில் சென்னை திரும்பினார்.

சென்னை விமானநிலையத்தில்  நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரஜினியிடம் பேட்டி காண நிருபர்கள் குவிந்திருந்தனர். ஆனால், அவர் பேட்டி கொடுக்காமல் விமான நிலையத்தில் இருந்து வேகமாக சென்றுவிட்டார்.

Related Stories:

More
>