பிரதமருடன் ரஜினி சந்திப்பு

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். கடந்த 25ம் தேதி 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்துக்கு சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்கினார். விருது பெற்ற ரஜினியை பல துறையினரும் பாராட்டியும், வாழ்த்தியும் வருகிறார்கள். ரஜினி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் லதா ரஜினியும் உடன் சென்றிருந்தார். ‘ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி’ என்று ரஜினி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>