மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 80 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது

* சனிக்கிழமை 7வது தடுப்பூசி முகாம்

* மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 75 லட்சத்து 99 ஆயிரத்து 263 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமை 7-வது தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் கடந்த 25ம் தேதி வரை அரசு மற்றும் மாநகராட்சி தடுப்பூசி மையங்களின் வாயிலாக 38,58,476 முதல் தவணை தடுப்பூசிகள், 22,95,556 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 61,54,062 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனைகளின் வாயிலாக 11,29,613 முதல் தவணை தடுப்பூசிகளும், 3,15,588 இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் என 14,45,201 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் வரை அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சார்பில் மொத்தம் 75,99,263 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் சார்பில் மீண்டும் வரும் 30ம் தேதி 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 7-வது தீவிர தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

எனவே, கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை கோவிட்தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் மாநகராட்சியின் சிறப்பு முகாம்களில் பங்குபெற்று கோவிட் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Related Stories: