×

மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியாக உயர்வு

மேட்டூர்:கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் மழை வலுத்துள்ளது. இதன் காரணமாக, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் மாலையில் நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை 30 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 27,251 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 37,162 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 102.79 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி வரை அதிகரித்து, நேற்று 105.14 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 71.66 டிஎம்சியாக உள்ளது.  நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Mettur dam water level rises to 105 feet
× RELATED சென்னை திருமங்கலத்தில் உள்ள...