விவேகானந்த ரெட்டி கொலை வழக்கு 4 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை

திருப்பதி: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகனின் சித்தாப்பாவும், முன்னாள் எம்பி.யுமான விவேகானந்த ரெட்டி, கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி புலிவேந்துலாவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக மாநில போலீசார் 18 மாதங்கள் விசாரணை நடத்தினர். பின்னர், ஆந்திரா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கடந்தாண்டு ஜூலையில் இந்த வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரில் 2 பேரை சிபிஐ கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கைது செய்தது. தற்போது இவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர். மற்ற 2 பேரும் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கில் சிபிஐ தனது குற்றப் பத்திரிக்கையை புலிவேந்துலா நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. இதில், காங்கி ரெட்டி, யடாதி சுனில் யாதவ், கஜ்ஜலா உமாசங்கர் ரெட்டி மற்றும் சயக் தஸ்தாகிரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Stories:

More
>