ஊதிய ஒதுக்கீடு நிலுவை தொகை தமிழகத்துக்கு உடனடியாக ரூ.984 கோடி தர வேண்டும்: அமைச்சர் பெரியகருப்பன் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை

புதுடெல்லி: அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று ஒன்றிய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ஒன்றிய ஊரக அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசியதோடு, அதுகுறித்த கோரிக்கை மனுவையும் அவரிகளிடம் வழங்கியுள்ளார். அதில்,‘2021ம் ஆண்டுக்கு ஒன்றிய அரசால் வழங்கப்படும்  ரூ.984.23 கோடி ஊதிய நிலுவையை பண்டிகை காலத்தை அடிப்படையாக கொண்டு உடனடியாக வழங்க வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர், அமைச்சர் பெரியகருப்பன் அளித்த பேட்டியில், ”மாகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் , ஊரக குடியிருப்பு திட்டம், ஒன்றிய அரசால் வழங்கப்படும் 14வது நிதி ஆணையத்தின் மானியம், மாவட்ட ஊரக வளர்ச்சி நிர்வாக நிதி ஆகிய ஐந்து கோரிக்கைகளை ஒன்றிய அமைச்சரிடம் வைத்துள்ளோம். இவை அனைத்தையும் பரிசீலனை செய்து மாநில வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்,’ என்று கூறினார்.

Related Stories:

More
>