அபுதாபி: ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர்-12 பிரிவில் 20வது லீக் ஆட்டத்தில் முதல் பிரிவில் உள்ள வங்கதேசம், இங்கிலாந்து அணிகள் நேற்று அபுதாபியில் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் களமிறங்கியது. இங்கிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேசம் 5.2ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 26ரன் எடுத்து இக்கட்டான நிலையில் இருந்தது. இடையில் வந்த முஷ்பிகுர் ரகீம் 29, கேப்டன் மகமதுல்லா 19, கடைசி நேரத்தில் நுருல் ஹசன் 16, நசிம் அகமது 19* ரன் எடுக்க ஸ்கோர் கொஞ்சம் உயர்ந்தது. இறுதியில் வங்கதேசம் 20ஓவருக்கு 9 விக்கெட்களை இழந்து 124ரன் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் டைமல் மில் 3, மொயீன் அலி, லிவிங்ஸ்டோன் தலா 2, கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.