போலி சான்றிதழ்களை ரத்து செய்யக்கோரி மேளம் அடித்து, நடனமாடி பழங்குடி மக்கள் நூதன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில், அதிகாரிகள் சார்பில் போலியான பழங்குடி சான்றிதழ் வழங்கியதை கண்டித்து ஆதிவாசி இருளர் இன மக்கள், கலெக்டர் அலுவலகம் அருகே மேளம் கொட்டி, நடனமாடி நூதன போராட்டம் நடத்தினர். திருத்தணி மற்றும் பள்ளிபட்டு வட்டத்தில் உள்ள பாண்டரவேடு, சொரக்காய்பேட்டை, மேலப்புடி, கீழப்புடி,படுதலம், காவேரி ராஜப்பேட்டை,பெருமாநல்லூர், மூலமத்தூர், ராமச்சந்திராபுரம் ஆகிய பகுதிகளில் 3000க்கும் மேற்பட்டோர்  போடி பழங்குடியின சான்றிதழ்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழக ஆதிவாசிகள் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் ஆதிவாசி இளைஞர் முன்னேற்ற சங்கம் சார்பில் போலி சான்றிதழ்களை உடனடியாக  ரத்து செய்ய வேண்டும், போலி ஜாதி சான்றிதழ்களுடன் அரசு வேலையில் இருப்போரை அடையாளம் கண்டு பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி ஜாதி சான்றிதழ் பெற்றவரையும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

போலி பழங்குடி இன ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு துணைபோகும் போலி பழங்குடியின சங்கங்களை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் ஆதிவாசிகள் சங்க மாநில பொது செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். இதில் ஆதிவாசி மக்கள் கலந்துகொண்டு போலி பழங்குடியின சான்றை ரத்து செய்யக்கோரி மேளம் அடித்து, நடனமாடி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories:

More
>