தெலங்கானா இடைத்தேர்தலில் பரபரப்பு ஆளும் கட்சி பிரசாரத்தில் சரக்கு அடிக்கும் சிறுவர்கள்: வலைதளங்களில் வைரல் வீடியோ

திருமலை: தெலங்கானா மாநிலம், உஸ்ராபாத் சட்டமன்ற தொகுதியில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி வேட்பாளராக நின்ற சந்திர சேகர் ராவ் வெற்றி பெற்று தற்போது மாநில முதல்வராக உள்ளார்.  அவரது அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக பதவி வகித்தவர் எடேலா ராஜேந்தர்.  முதல்வர் சந்திரசேகருடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் இவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.

இந்நிலையில், ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் போட்டியிடும் ஸ்ரீனிவாசன், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடைய பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த சில சிறுவர்கள் மது அருந்தும் வீடியோ தற்போது வைரலாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. எதோ குளிர்பானம் அருந்துவது போல் சாலையில்  மதுவை சிறுவர்கள் மாறி மாறி குடித்து கொண்டிருக்கின்றனர். இப்படி சிறு வயதிலேயே போதைக்கு அடிமையாகி விட்டால் நாளை அவர்களது வாழ்க்கை என்னவாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியுள்ளது. இவர்களை மது அருந்த ஊக்கப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Related Stories: