முதல்வருடன் சவுந்தர்யா ரஜினி சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சவுந்தர்யா ரஜினி சந்தித்தார். ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான சவுந்தர்யா ரஜினி சமீபத்தில் புதிய மொபைல் ஆப் ஒன்றை தொடங்கினார். இதை தொடர்ந்து நேற்று அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தனது ஆப் பற்றி அவரிடம் விளக்கி சொல்லி, அவரது வாழ்த்தை பெற்றார். இதுகுறித்து சவுந்தர்யா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தமிழக முதல்வரை சந்தித்து எனது ஆப் பற்றி விவரித்து, அவருடைய வாழ்த்துகளை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories:

More
>