ஆதிதிராவிடர்,பழங்குடியினர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் துறை சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் !

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் மாநில அளவிலான துறை சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலாளர் மரு.கே.மணிவாசன், இ.ஆ.ப., ஆணையர் எஸ்.மதுமதி,இ.ஆ.ப., தாட்கோ மேலாண்மை இயக்குநர் கே.விவேகானந்தன், இ.ஆ.ப., இணை இயக்குநர்சு.பழனிசாமி,இ.ஆ.ப.,

சென்னை மாவட்ட ஆட்சியர் முனைவர்.ஜெ.விஜயா ராணி,இ.ஆ.ப., பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ராகுல்,இ.வ.ப., தாட்கோ பொது மேலாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 5 பயனாளிகளுக்கு ரூ.27.06 இலட்சம் மதிப்பிலான பயணியர் வாகனம், டிராக்டர், ஆட்டோ போன்ற வாகனங்களும், மூன்று பயனாளிகளுக்கு ரூ.27.24 இலட்சம் மதிப்பிலான தொழில் முனைவோருக்கான காசோலைகளும் வழங்கப்பட்டது. இதற்கான அரசு மானியத் தொகை ரூ.14.75 இலட்சம் ஆகும்.

இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் தெரிவித்ததாவது: ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் தொடர்பாக மாவட்டங்கள் தோறும் கள ஆய்வுகளை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை அனைவரும் பெறும் வகையில் பணியாற்றிட தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார் எனவும், தற்போது கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதால் பணிகளை விரைவுபடுத்துமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், அடுத்த ஆய்வின்போது சரிவர பணிகளை மேற்கொள்ளாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். தாட்கோ சம்பந்தமான குறைகளைத் தெரிவிக்க பின்வரும் நான்கு மண்டல அலைபேசி எண்களைத் தொடர்புக்கொள்ளலாம் எனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நான்கு மண்டலங்களின் கட்டுப்பாட்டு அறைகள் எண்கள்

வ.எண். மண்டலங்களின் பெயர் அலைபேசி எண்கள்    

* சென்னை   -  7448828476    

* கோவை      -  9445029498    

* திருச்சி     - 7448828501    

* மதுரை     - 9445029542   

Related Stories:

More
>