துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.: மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அரசு வழக்கறிஞர் தகவல்

சென்னை: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரிய மனு மீது மீண்டும் விசாரணை நடத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துக்ளக் பத்திரிகையின் 51-வது ஆண்டு விழாவில் நீதிபதிகள் நியமனம் குறித்து குருமூர்த்தி கடும் விமர்சனம் செய்து இருந்தார். உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள் என குருமூர்த்தி பேசியிருந்தார். மேலும் யார் காலையோ பிடித்துத் தான் நீதிபதிகளாக வந்துள்ளதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கடுமையாக விமர்சனம் செய்தார். அதனையடுத்து, தகுதியின் அடைப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை எண்ணூறும் அவர் தெரிவித்தார்.

நீதித்துறை, நீதிபதிகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக் காலத்தில் மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு மீது மீண்டும் நவ.11-ல் விசாரணை நடத்தப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.  

Related Stories:

More
>