முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தில் மாற்றம் தேவையில்லை: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தில் மாற்றம் தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய நீர்வள ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த விசாரணையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மை பற்றி கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. மேலும் வதந்திகள் பரப்புவது கவலை அளிக்க கூடியது என வழக்கு விசாரணையில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து, 141 அடிக்கு மேல் உயர்த்தினாலும் முல்லைப் பெரியாறு பாதுபாப்பானதே என பல ஆய்வுகள் கூறுவதாக தமிழக அரசு கூறியது. பின்னர் வாதிட்ட ஒன்றிய அரசு வழக்கறிஞர், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தில் மாற்றம் தேவையில்லை. நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது; அணை தீவிர கண்காணிப்பில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து நீதிபதி கூறுகையில், அணையின் நீர் அளவு அபாய கட்டத்தில் இல்லாதபோது தற்போது இதைப்பற்றி பேச அவசியமென்ன? என கேள்வி எழுப்பினர். மேலும் ஒன்றிய நீர்வள ஆணையத்தின் அறிக்கைக்கு பதில் மனு தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

அதைத்தொடர்ந்து ஒன்றிய நீர்வள ஆணையத்தின் அறிக்கையை தாக்கல் செய்த பின் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு விசாரணை நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: