ஹெலிகாப்டர் சகோதரர்கள் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையில் திருப்தியில்லை:உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: கும்பகோணத்தை சேர்ந்த பாஜக பிரமுகர்களான ஹெலிகாப்டர் சகோதரர்கள் நடத்திய நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணையில் திருப்தி இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த கணேசன், சுவாமிநாதன் பாஜக கட்சியின் பிரமுகர்களாக உள்ள நிலையில், இவர்கள் நிதி நிறுவனங்கள் நடத்தி வந்தனர். அதன் மூலம் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்ததுடன், நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நபர்களுக்கு நிதி தராமல் தலைமறைவாக இருந்தனர். இது தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்த நிலையில், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை பொறுத்தவரையில் தற்போது வரை ரூ.600 கோடி அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிதி நிறுவனத்திற்கு உதவி செய்ததாக சோலை என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனையடுத்து நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சோலை என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது, விசாரணை அதிகாரி பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் நேரில் ஆஜராகியிருந்தார். அவரிடம் நீதிபதி பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள கணேசன் என்பவருடைய மனைவி அகிலாண்டம் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று உள்ளார்.

இவர் மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஜாமீன் பெற்றதால் அவர்கள் மோசடி செய்ததை நிரூபிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். எனவே இதனை முறையாக கையாண்டிருக்க வேண்டாமா என்று நீதிபதி அதிர்ப்த்தியை தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணை அதிகாரிகள் முறையாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்று குடுத்தாள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். எனவே விசாரணை அதிகாரிகள் முறையாக செய்யப்பட வேண்டும் என நீதிபதிகள் அறிவுரை வழங்கினார். மேலும் இந்த வழக்கில் ஜாமீன் கோரியுள்ள மனுதாரர் இந்த நிறுவனத்திற்கு உதவி செய்ததாக மட்டுமே தற்போது குற்றசாட்டுகள் பதிவாகியுள்ள நிலையில், அவரை 60 நாட்களுக்கு மேல் சிறையில் வைக்க முடியாது. அதானால் அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: