கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி தர கூடுதல் விபரங்களை கேட்கிறது உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: அவசர கால பயன்பாட்டுக்காக கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி தர கூடுதல் விவரங்களை பாரத் பயோ டெக் நிறுவனம் அளிக்க WHO உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், வெளிநாடு செல்வோர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் வைத்து இருப்பது அவசியமாகியுள்ளது. இந்தநிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவாக்சினுக்கு அந்த அனுமதி இன்று வரை வழங்கப்படவில்லை.

ஆனால் உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாட்டு பட்டியலில் கோவாக்சின் இடம் பெறுவதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் முன்னதே விண்ணப்பித்து இருந்தது. செவ்வாய்க்கிழமை ஒப்புதல் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசி பற்றிய கூடுதல் விவரங்களை கேட்டுள்ளது. இதனையடுத்து, கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான கூட்டம் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More
>